பிரகீத் எக்னெலிகொட வழக்கு – ஒத்துழைக்காத இராணுவம்

376 0

prageeth-eknaligoda-400-seithy1ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல்போன வழக்கு விசாரணைகளுக்கு இராணுவம் ஒத்துழைப்பு வழங்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களம் இவ்வாறு குற்றம்சுமத்தியுள்ளது.

இந்த விசாரணைகளுக்கு இராணுவம் எவ்வித ஒத்துழைப்பினையும் வழங்கவில்லை என தெரிவித்த பிரதி சொலிசுட்டர் ஜெனரல் சரத் ஜயமான சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் இராணுவ உயர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் இந்த அழைப்புக்களுக்கு எவ்வித பதிலும் அளிக்கப்படவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்