மட்டக்களப்பு வளாகம் சட்டத்திற்கு முரணானது – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

406 0

வைத்திய சபையின் அனுமதிக்கமைய மட்டக்களப்பு வளாகம் ( பெடிக்லோ கெம்பஸ்) தனியார் கல்வி நிறுவனத்தின் மருத்துவ பீடம் ஆரம்பிக்கப்பட வில்லை.

 

பல்கலைகழக சட்டமூலத்துகுக்கு அமைவாகவே அல்லது வைத்திய கட்டளைச்சட்டத்துக்கு அமைவாகவோ இந்த மட்டகளப்பு வளாகம் ஆரம்பிக்கப்பட வில்லை என்றும் இந்த தனியார் கல்வி நிறுவனம் தொடர்பான கொடுக்கல் வாங்கள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் சட்டத்துக்கு புறம்பாக இடம்பெற்றவையாகும்.

ஆகவே இந்த நிறுவனத்தின் வைத்திய கல்வி நடவடிக்கைகளை இரத்து செய்ய வேண்டும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே மட்டக்களப்பு வளாகம் தனியார் கல்வி நிறுவனத்துக்க தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்த வளாகத்துக்கும் சைட்டம் தனியார் தொழில்நுட்ப கல்லூரிக்கும் நெருங்கிய தொடர்பு காணப்பட்டதாகவும் பட்டப்படிப்பை அடிப்படையாக கொண்டும் அரசியல்வாதிகளின் தன்னாதிக்கத்தின் கீழ் இந்த இரண்டு நிறுவனங்களும் நிறுவகிக்கப்பட்டதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

கொழும்பில் அமைந்துள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் காரியாலத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதை குறிப்பிட்ட வைத்தியர் ஹரித அலுத்கே கூறியதாவது,

மட்டக்களப்பு வளாகம் தனியார் கல்வி நிறுவனத்துக்கு எதிரான பல்வேறு குற்றசாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் சம்பவங்களை அடுத்தே இந்த தனியார் கல்வி நிறுவனம் தொடர்பான தகவல்கள் வெளிப்பட்டு வருகின்றன.

எனவே இந்த நிறுவனத்தின் ஆரம்பம் முதல் இதுவரையான செயற்பாடுகள் குறித்து விசாரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

2013 ஆம் ஆண்டு இரா மன்றம் என கூறப்படும் விவசாய அமைப்பொன்றினால் மாகாவலி வேலைத்திட்டத்தினூடாக தொழில்பயிற்சி நிறுவனமொன்றை அமைப்பதற்காக நீண்டகால வரி அடிப்படையில் பெற்றுக்கொண்ட நிலத்திலேயே இந்த மட்டக்களப்பு வளாகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இதனை நிர்மாணிப்பதற்கு 3600 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதோடு இந்த நிதி அல் அப்துல்லா அல் ஜிபால் நிறுவகத்தினூடாக பெற்றுக்கொடுக்கப்பட்டள்ளது. இருப்பினும் அந்த நிதி இலங்கைக்கு எவ்வாறு வந்தது என்பது தொடர்பிலோ அல்லது எவ்வாறு செலவளிக்கப்பட்டது என்பது தொடர்பிலோ எந்த கணக்கு வளக்குகளும் கிடையாது.

இந்த கொடுக்கல் வாங்கல்கள் இதுவரையில் சந்தேகத்துறியதாக இருக்கம் அதேவேளை இந்த வளாகத்தில் 90 வீதமான உரிமை இரா மன்றத்துக்கும் மிகுதி 10 வீதமான பங்கு கிழக்கு மாகாண ஆளுனர் ஹஷாத் சாலி மற்றும் அவரது மகனுக்கும் உரியதாகும்.

பட்டப்படிப்புக்காக எந்த அனுமதியும் வழங்கப்படாத இந்த நிறுவனத்தில் இலங்கை வைத்திய சபையின் எவ்வித அனுமதியும் இன்றி வைத்திய பட்டப்படிப்புக்களை வழங்க இந்த மட்டக்களப்பு வளாகம் முயற்ச்சித்து வருகிறது.

இந்த கல்வி நிறுவனத்தின் நடவடிக்கைகள் அனைத்தும் சந்தேகத்துக்குறியது என்று ஆளும் தரப்பு உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டள்ளனர். மேலும் இது தொடர்பாக விசேட விசாரணைகள் முன்னெடுப்பதுடன் அது தொடர்பான தகவ்லக்ளை மக்களுக்கு வழங்கவும் அதிகாரிகள் செயற்படுவது அவசியமாகும்.

இதுவரையில் எமக்கு கிடைக்ப்பெற்றுள்ள தகவல்களுக்கு அமைவாக இந்த மட்டக்களப்பு வளாகத்துக்கும் சைட்டம் தொழில் நுட்பக் கல்லூரிக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் பேணப்பட்டுள்ளது.சைட்டம் கல்லூரி மற்றும் இந்த மட்டக்களப்பு வளாகம் ஆகிய இரண்டு நிறுவனங்களும் சூட்சுமமான மறையில் தமது வேலைத்திட்டங்களின் பெயர்களை மாற்றியுள்ளத மாத்திமல்லாமல் நிதி பயன்பாட்டிலும் ஒத்த தன்மை பேணப்பட்டு வந்துள்ளது. மேலும் பட்டப்படிப்புகளுக்காக தன்னாதிக்கமாக செயற்ப்பட்டத மாத்திரமல்லாமல் இந்த இரண்டு நிறுவனங்களிலும் அரசியல் தன்னாதிக்கம் காணப்பட்டுள்ளது.

எனவே மட்டக்களப்பு வளாகத்தினை செயற்பாடுகளை முழுமையாக கட்டப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.