வணிகம் மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரிஷாத் பதியூதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முழு ஆதரவை வழங்குவதாக இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி சபாநாயகருக்கு கடிதம் ஊடாக தெரியப்படுத்தியுள்ளார்.
ரிஷாத் பதிவுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நேற்று வியாழக்கிழமை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் நாட்டில் இல்லாததால் இவ்வாறாக கடிதம் ஊடாக தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
குறித்த தெரிவித்த விபரங்கள்
வணிகம் மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரிஷாத் பதிவுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்த்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களினால் தங்களிடம் இன்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆயினும் நான் நாட்டில் இல்லாததன் காரணத்தினால் அதில் கையொப்பமிட முடியாமல் போயுள்ளது.
முஸ்லிம் அடிப்படைவாதத்திற்கு தூண்டுதலாக இருந்த அமைச்சர் ரிஷாத் பதியூதீனுக்கும் அவரை பாதுகாக்கும் அரசாங்கத்திற்கும் எதிராக மக்களின் எதிர்ப்பு உருவாகியுள்ளது.
இந்நிலையில், அமைச்சர் ரிஷாத் பதியூதீனுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எனது முழுமையான ஆதரவை வழங்குவதுடன், நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட இயலாத நிலையை ஆராய்ந்து இந்த கடிதத்தை ஏற்றுக்கொள்ளுமாறும் , நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் பாராளுமன்றில் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு வாக்கெடுப்பு இடம் பெறும் போது அதற்கான முழுமையான ஆதரவை வழங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.