கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவினால் அமைக்கப்பட்டுவரும் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் குறித்து தற்போது ஆராயப்பட்டு வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த பல்கலைக்கழகம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதையடுத்து அதனை ஆராய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஆசுமாரசிங்க தலைமையில் நாடாளுமன்ற உயர் கல்வி ஆலோசனைக் குழு நேற்று மட்டக்களப்பிற்கு விஜயம் செய்திருந்தது.
இந்நிலையில், தற்போது பல்கலைக்கழகம் தொடர்பாக குறித்த குழுவினர் தமது ஆய்வுகளை முன்னெடுத்து வருவாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்தப் பல்கலைக்கழகம் அமைப்பதற்காக வழங்கப்பட்ட வெளிநாட்டு நிதியில் முறைகேடு இடம்பெற்றுள்ளதா? பல்கலைக்கழகமானது உயர்கல்வி சட்டதிட்டங்களை மீறியுள்ளதா என்பது உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து இந்த குழு ஆராய்ந்து வருகிறது.
அதன்பின்னர் ஆய்வறிக்கையை உயர் கல்வியமைச்சுக்கும் நாடாளுமன்றத்துக்கும் சமர்ப்பிக்கவுள்ளதாக குழுவின் தலைவர் ஆசுமாரசிங்க தெரிவித்துள்ளார்.