நினை­வேந்­தலை இரா­ணுவம் ஒரு­ போதும் தடுக்­காது- மஹேஸ் சேனா­நா­யக்க

711 0

வடக்கு கிழக்கில் மக்கள் நினை­வேந்தல் நிகழ்­வு­களில் ஈடுபடலாம். அவர்­களின் உணர்­வு­க­ளுக்கும் உரி­மைக்கும் மதிப்பளிக்­க­வேண்டும்.

எனவே நினை­வேந்­தலை இரா­ணுவம் ஒரு­ போதும் தடுக்­காது என இரா­ணுவ தள­பதி லெப்­டினன்ட் ஜெனரல் மஹேஸ் சேனா­நா­யக்க தெரி­வித்தார். எனினும் அவ­ச­ர­கால சட் டம் நடை­மு­றையில் உள்ளதை கருத்தில் கொண்டு அமை­தி­யாக அனை­வரும் செயற்­பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக் காட்­டினார்.

இரா­ணுவ வெற்­றி­தின கொண்­டாட்­டங்கள் குறித்து  இரா­ணுவ தளப­தியின் தலை­மையில் நேற்று இடம்­பெற்ற விசேட செய்தியாளர் சந்­திப்பில் வடக்கின் நினை­வேந்தல் நிகழ்­வுகள் குறித்து கேள்வி எழுப்­பிய போது அதற்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் இதனைக் குறிப்­பிட்டார்.

அவர் மேலும்  குறிப்­பி­டு­கையில்

யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்டு  10 ஆண்­டுகள் பூர்த்­தி­யாகும் நிலையில் சமா­தா­னத்தின் தசாப்த நினை­வு­தினம் இம்­மு­றையும் கொண்­டா­டப்­ப­ட­வுள்­ளது.எனினும் இப்­போது நாட்டில் சற்று அமை­தி­யின்மை நில­வு­கின்ற நிலையில் அதுவும் கருத்தில் கொள்ளப்­பட்­டுள்­ளது.

எனினும் யுத்த வெற்­றியை மக்­க­ளுக்கு நினை­வு­ப­டுத்த வேண்டும்.  இந்த யுத்­தத்தில் 20 ஆயிரத்­துக்கும் அதி­க­மான இரா­ணுவ வீரர்கள் கொல்­லப்­பட்­டனர். நாட்­டுக்­காக உயிர் நீத்த இவர்­களை நினைவுபடுத்த வேண்டும்.

ஆகவே தான் மே மாதம் 19 ஆம் திகதி தொடக்கம் 21 ஆம் திகதி வரையில் இரா­ணுவ வெற்றி தினம் மற்றும் நினை­வு­தின நிகழ்வுகள்  நடை­பெ­ற­வுள்­ளன.

யுத்­தத்தில் தமிழ் மக்­களும் அதி­க­மாக இறந்­துள்­ளனர். தமது உறவுகளை உடை­மை­களை என பல இழப்­புகள் அவர்­க­ளுக்கும் ஏற்­பட்­டுள்­ளன.

ஆகவே தமிழ் மக்­களின் உற­வி­னர்­க­ளுக்கும் அவர்கள் ஒவ்­வொரு ஆண்டும் நினை­வஞ்­சலி செலுத்­து­கின்­றனர்.இவர்­களின் நினைவேந்தல் நிகழ்­வு­களை நாம் ஒரு­போதும் தடுக்க மாட்டோம்.

வடக்க- கிழக்கில் பாதிக்­கப்­பட்ட மக்கள் உற­வி­னர்­களை இழந்தவர்கள் தமது உற­வி­னர்­களை  நினை­வு­கூர்­வதில்  எந்த தவறும் இல்லை.அதில் எந்த தடையும் இல்லை.அது நடத்­தப்­பட வேண்டும்.

இந்த நாட்டில் உள்­நாட்டு யுத்தம் ஒன்று இடம்­பெற்­றது.இதில் கொல்­லப்­பட்ட அனை­வரும் இலங்கை மக்கள்.ஆகவே அவர்களுக்­காக பிரார்த்­த­னை­களை செய்­யவும் நினை­வு­கூ­ரவும் தமிழ் மக்­க­ளுக்கு சகல உரி­மை­களும் உள்­ளன.

அதனை தடுக்க எவ­ருக்கும்  எந்த அதி­கா­ரமும் இல்லை.

இன்று நாட்டில் சில அசா­தா­ரண நிலை­மைகள் உள்ள காரணத்தினால் அத­னையும் சக­லரும் கருத்தில் கொள்ள வேண்டும்.

அவ­ச­ர­கால சட்டம் நடை­மு­றையில் உள்­ளது ஆகவே அதில் மக்கள் அமை­தி­யாக நடந்­து­கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுக்கின்றோம்.

வடக்கின் அரசியல் வாதிகள் மக்கள் அனைவரும் அமைதியாக நினைவேந்தல் பகுதிகளில் தமது பிரார்த்தனைகளை செய்துவிட்டு அமைதியாக வீடு திரும்பினால் யாருக்கும் எந்த பிரச்சினையும் வராது  என்றார்.