கோவாவில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் கால்பந்து போட்டியில் இன்று சீனாவுடன் ரஷியா மோதுகிறது.கோவாவில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுவதையொட்டி பிரிக்ஸ் நாடுகள் பங்கேற்கும் கால்பந்து போட்டிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்த விளையாட்டுப் போட்டியை உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து கோவா வந்துள்ள அரசு அதிகாரிகளும், பத்திரிகையாளர்களும் வெகுவாக பார்த்து, ரசித்து வருகின்றனர்.
அவ்வகையில், பிரிக்ஸ் யூ-17 சுழற்கோப்பைக்காக தென்னாப்பிரிக்காவுடன் பிரேசில் மோதும் இறுதிச்சுற்று போட்டியும், மூன்றாம் இடத்துக்காக சீனாவுடன் ரஷியா மோதும் போட்டியும் தெற்கு கோவாவில் உள்ள பட்டோர்டா நகரில் உள்ள பண்டிட் ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் இன்று நடைபெறுகிறது.
நாளை (16-ம் தேதி) பிரிக்ஸ் மாநாட்டின் நிறைவு விழாவின்போது இந்திய கலாசாரத்தை விளக்கும் இசை, நடன நிகழ்ச்சிகளுக்கும், கண்கவர் வானவேடிக்கை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.