ஐ,எஸ்.ஐ.எஸ். இன் நோக்கம் நாட்டுக்குள் பிரச்சினையை ஏற்படுத்தி இனங்களுக்குள் முரண்பாடை ஏற்படுத்துவதாகும். இதில் நாங்கள் சிக்கிக்கொள்ளாமல் இலங்கையர்களாக இருந்து இதனை வெற்றிகொள்ள முயற்சிக்க வேண்டும் என அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.
முஸ்லிம் சிவில் அமைப்பினால் இன்று இலங்கை மன்றக்கல்லூரியில் ஏற்பாடுசெய்யப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஐ,எஸ்.ஐ.எஸ். அமைப்பினால் முஸ்லிம் சமூகமே அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றது. இதனை அதிகமானவர்கள் உணர்ந்துகொள்வதில்லை. உயிர்த்த ஞாயிதினம் இடம்பெற்ற தாக்குதல் காரணமாகவும் முஸ்லிம் மக்களே பாதிக்கப்பட்டு வருகின்றன. அடிப்படைவாதம் அனைத்து இனங்களிலும் இருக்கின்றது. அடிப்படைவாதத்துக்கு மதம் கிடையாது.
தற்போது முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறையும் சிங்கள அடிப்படைவாதிகள் ஒருசிலராலே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதனால் ஒட்டுமொத்த சிங்கள மக்களையும் இதில் இணைத்துக்கொள்ள முடியாது. அதேபோன்றுதான் உயிர்த் ஞாயிறு தினம் இடம்பெற்ற குண்டுதாக்குதல் முஸ்லிம் அடிப்படைவதிகளால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலாகும் என்றார்.