உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தற்கொலை குண்டுதாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாரவாதம் ஏன் இலங்கையில் உருவானது என்பது பற்றிய தகவல் கண்டுப்பிடிக்கப்படாமல் இந்த அச்சுறுத்தலை ஒழிப்பது கடிணமாகும் என கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்தார்.
சமநிலைக்கான தேசிய சக்தி அமைப்பினால் இன்று ராஜகிரியவில் அமைந்துள்ள தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைமை காரியலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டடிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலின் பின்னணி பற்றி இதுவரை தகவல் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த தாக்குதல் நாட்டை பழிவாங்கும் நோக்கிலா அல்லது நாட்டை கைப்பற்றும் நோக்கிலா மேற்கொள்ளப்பட்டது என்பது பற்றிய தகவல் எவையும் இதுவரை தெரியவில்லை. ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான கருத்துக்களை கூறுகின்றனர் . எனவே இதற்கான தீர்வினை அடைவது கடினமாகும்.
இந்த தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட 150 நபர்களில் 120 நபர்கலை கைது செய்துள்ளதுடன் இந்த பிரச்சினைக்கு நூற்றுக்கு தொன்நூறு சதவீதம் தீர்வுகாணப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மிகவும் சாதாரணமாக கூறுகின்றார். அதேவேளை இந்த விடையத்தினை மிகவும் சாதாரனமாக பார்ப்பதாக அவருடைய நடவடிக்கைகளில் இருந்து தெரிகின்றது.
இந்த தாக்குதல் சம்பவத்தின் போது சிங்கப்பூரில் இருந்த ஜனாதிபதி நாடுதிரும்பியதும் அவருடைய மகனின் திருமணம் பற்றியே சிந்தித்தார். அவருடைய செயற்பாட்டினையே மற்றைய அரசியல்வாதிகளும் பின்பற்றுகின்றனர்.
இந்த தற்கொலை குண்டுத்தாக்குதல் யாரால், எங்கிருந்து, எதற்கு மேற்கொள்ளப்பட்டது என்ற கண்ணோட்டத்தில் விசாரணையை முன்னெடுத்தால் அதற்கான நிரந்தர தீர்வினை அடையமுடியும் என்றார்.