ருவான்டா ஒப்பந்தத்தில் 150 நாடுகள் கையொப்பம்

328 0

201610151143170880_150-nations-agree-major-deal-in-rwanda-to-cut-greenhouse_secvpfஏ.சி., பிரிட்ஜ் வெளியேற்றும் கரியமிலம் உள்ளிட்ட நச்சு வாயுக்களை கட்டுப்படுத்த ருவான்டா நாட்டில் இன்று ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தில் 150 நாடுகள் கையொப்பமிட்டுள்ளன.

பூமி வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைக் கொண்ட ஒப்பந்தம் கடந்தாண்டு பாரிஸில் நடைபெற்ற கூட்டத்தில் வரைவு செய்யப்பட்டது.

அதிகளவில் நச்சு வாயுக்களை வெளியிடும் நாடுகள் ஒப்பந்தத்தில் பங்கேற்க ஒப்புதல் அளித்தால் மட்டுமே இது அமலுக்கு வரும் நிலை இருக்கிறது. இந்த ஒப்பந்தத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.

சர்வதேச அளவில் அதிகளவில் நச்சுவாயுக்கள் வெளியிடும் நாடுகள் பட்டியலில் 4.1 சதவிகிதத்துடன் இந்தியா 4-வது இடத்தில் உள்ள நிலையில் இந்த ஒப்பந்தத்தில் ‌இந்தியா கையெழுத்திடுவது முக்கியத்துவ‌ம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

புவி வெப்பமாதலை கட்டுப்படுத்தும் வரலாற்றுச் சிறப்பு மிக்க பாரிஸ் உடன்படிக்கையில் பங்கேற்பதற்கான முறையான ஒப்புதலை இந்தியா சமீபத்தில் வழங்கியது.

இந்நிலையில், ஏ.சி., பிரிட்ஜ் வெளியேற்றும் கரியமிலம் உள்ளிட்ட நச்சு வாயுக்களை கட்டுப்படுத்த ருவான்டா நாட்டில் இன்று ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தில் 150 நாடுகள் இன்று கையொப்பமிட்டுள்ளன.

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரி-யால் ஒப்புக்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தின்படி தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் ‘ஹைட்ரோபுளூரைட்கார்பன்’ எனப்படும் நச்சுத்தன்மை கொண்ட கரியமில வாயுவை வெளியிடும் நாடுகள் மூன்று வகையாக தரம் பிரிக்கப்பட்டுள்ளன.

ஐரோப்பா மற்றும் அமெரிக்க கண்டத்தில் உள்ள வளர்ந்த நாடுகள் வரும் 2019-ம் ஆண்டுக்குள் இத்தகைய வாயுக்களை 10 சதவீதம் குறைத்துக் கொள்ளவும், வளரும் நாடுகளை இருபிரிவுகளாக்கி வரும் 2024 அல்லது 2028-ம் ஆண்டுக்குள் தங்கள் நாடுகள் வெளியேற்றும் கரியமில வாயுக்களை படிப்படியாக குறைத்துக் கொள்ளவும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கின்றது.