எகொடமல்வல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இருவர் பலி

275 0

இரத்தினபுரி – எகொடமல்வல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (16) அதிகாலை 4 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எகொடமல்வல பகுதியை சேர்ந்த 43 வயதுடைய லாலனி புஷ்பலதா மற்றும் அவரது தாயான 75 வயதுடைய ​கே. நந்தவதி ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

குறித்த மகளின் கள்ள கணவரினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.