ஹொரணை, நாரகல பிரதேசத்தில் களு கங்கையில் இருந்து இனந்தெரியாத சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர் கூறினார்.
இன்று காலை ஹொரணை – நாரகல பாலத்திற்கு அடியில் இருந்து சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
புளத்சிங்கள பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பாலத்திற்கு அருகில் பாதணி ஒன்றும் சைக்கிள் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.