“மதனமோதகம்” எனப்படும் போதை மாத்திரைகளை வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்களை நேற்றிரவு கைதுசெய்துள்ளதாக மதுவரித்திணைக்கள உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.குறித்த இரண்டு சந்தேக நபர்களும் மதனமோதகத்தினை விற்பனை செய்து வருவதாக மதுவரித்திணைக்களத்திற்கு கிடைக்கபெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளபட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாகவும் கைது செய்யபட்டவர்கள் கொட்டகலை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் மதுவரித்தினைக்கள அதிகாரிகளின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை இரண்டு சந்தேக நபர்களிடமிருந்து 150மில்லிகிராம் மதனமோதகம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கைது செய்யபட்ட சந்தேக நபர்களை இன்று வியாழகிழமை அட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை அட்டன் மதுவரி திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டுள்ளார்கள்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை அட்டன் மதுவரி திணைக்களம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.