கர்நாடகத்தில் செயற்கை மழையை பெய்விக்க ரூ.88 கோடி செலவில் பெங்களூரு மற்றும் உப்பள்ளியில் இதற்கான மையங்கள் அமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை நன்றாக பெய்யும். குறிப்பாக மங்களூரு, உடுப்பி, குடகு, மைசூரு உள்ளிட்ட பகுதிகளில் அதிக மழை பொழிவு இருக்கும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை 5 நாட்கள் தாமதமாக ஜூன் 6-ந் தேதி தொடங்கும் என்றும், மழை குறைவாகத்தான் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனவே கர்நாடகத்தில் செயற்கை மழையை பெய்விக்க மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ரூ.88 கோடி செலவில் பெங்களூரு மற்றும் உப்பள்ளியில் இதற்கான மையங்கள் அமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 2 ஆண்டுகளுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கர்நாடகத்தில் ஏற்கனவே இத்தகைய செயற்கை மழை பெய்விக்கப்பட்ட வரலாறு உண்டு.