சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன இன்று இந்தியா புறப்படுகின்றார்.
கோவாவில் இன்று ஆரம்பமாகும் பிரேசில், ரஸ்யா, இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் மற்றும் வங்களா விரிகுடா விளிம்பு நாடுகளின் கூட்டமைப்பு மாநாடுகளில் கலந்துகொள்ளவே அவர் இந்தியா புறப்படுகின்றார்.
பீரிக்ஸ் மாநாட்டுக்கு இம்முறை தலைமைதாங்கும் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியின் விசேட அழைப்பின் பேரிலேயே மைத்திரிபால சிறிசேன இந்தியா புறப்படுகின்றார்.
அத்துடன், வங்காள விரிகுடா விளிம்பு நாடுகளின் கூட்டமைப்பில் இந்தியா, தாய்லாந்து, பங்காளதேஸ், மியான்மார், நோபாளம் ஆகிய நாடுகளுடன் சிறிலங்காவும் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.
இன்றும் நாளையும் நடைபெறவுள்ள மாநாடுகளில் சிறீலங்காவின் ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன பல நாடுகளின் தலைவர்களையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார்.
இந்த மாநாடுகளில் பங்கேற்க வரும் உலகத் தலைவர்களுக்கு இன்று இரவு பிரதமர் நரேந்திரமோடி இராப்போசனம் வழங்கவுள்ளார்.