இலங்கையின் போர்குற்ற பொறிமுறைக்கு சர்வதேச நீதிபதிகள் அவசியம் – ஹூசைன்

472 0

575932Rights_Commissionerஇலங்கையின் நல்லணக்கத்திற்கான நடவடிக்கைகளின் போது போர் குற்ற விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகள் உள்ளடக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
போர்குற்ற விசாரணைகளின் போது சாட்சியாளர்களின் பாதுகாப்பு முக்கியமானது எனவே அதனை சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய பொறிமுறை ஒன்றினாலேயே நடைமுறைபடுத்த முடியும் என ஆணையாளர் ஷெயிட் ராட் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் போரவையின் 32வது அமர்வு தற்போது ஜெனிவாவில் இடம்பெற்று வருகிறது.
இதில் நாளை 29ஆம் திகதி ஆணையாளர் இலங்கையின் மனித உரிமைகள் மீறல் தொடர்பில் மேற்கொள்ளப்படும் முன்னேற்ற நடவடிக்கை குறித்து வாய்மூல அறிக்கை ஒன்றை முன்வைக்க உள்ளார்.
இந்தநிலையில் அவரது அறிக்கையின் பிரதி இன்று வெளியாகியுள்ளது.
இதன்படி விடுதலை புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது படையினரால் மேற்கொள்ளபட்டதாக கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பில் இலங்கை உரிய விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.
இதன்போது சாட்சிகள் பாதுகாக்கபட வேண்டும்.
எனினும் இலங்கையின் நீதி அமைப்புக்களில் இதற்கான பொறுப்புக்கூறல் தற்போதைக்கு குறைவாகவே உள்ளது.
எனவே, பாதிக்கப்பட்டோருக்கு பொறுப்பு கூறல் பொறிமுறையின் போது சுயாதீனமான பக்கசார்பற்ற தன்மைகள் அவசியமானவை என ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையை பொறுத்த வரையில் குறித்த விசாரணைகள் போர்குற்றம் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்களாகவே கருதப்படுவதாக ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஜனாதிபதியும் பிரதமமந்திரியும் உள்நாட்டு விசாணையின் போது வெளிநாட்டு நீதிபதிகள் உள்வாங்கப்படமாட்டார்கள் என தெரிவித்துவருகின்ற நிலையிலேயே ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் இந்த செய்தி வெளியாகியுள்ளது.
இதேவேளை, தொடர்ந்தும் இடம்பெற்று வரும் பலவந்த கைதுகள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள், இராணுவ கண்காணிப்புக்கள், தொந்தரவுகள் போன்ற விடயங்களில் அரசாங்கம் உடனடியா தலையிடவேண்டம் என ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறான நிலைமை ஒன்றின் போதே தமிழ் சிறுபான்மை இனத்தின் நம்பிக்கையை இலங்கையால் வெற்றிக்கொள்ள முடியும் என ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
தாம் கடந்த வருடம் வருடம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் விடுவிக்கப்படுவர் அல்லது அவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படும் என உறுதியளிக்கபட்டது.
எனினும் தொடர்ந்தும் சுமார் 250 பாதுகாப்பு கைதிகள் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்று ஷெயிட் சுட்டிக்காட்டியுள்ளார்.
இராணுவத்தினர் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுப்படுதல் மற்றும் சமூக தளங்களின் ஊடாக பிரசாரங்களில் ஈடுபடுவது போன்ற செயல்கள் இன, சமய மற்றும் ஏனைய சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகளாக கருத்திற்கொள்ளப்படும்.
புதிய அரசாங்கம் பதவியேற்று பல மாதங்கள் சென்றுள்ள நிலையில் ஐக்கிய நாடகள் மனித உரிமை பேரவையின் யோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்கு கால அவகாசம் தேவை.
சவால்களை இனங்காணுதல் மற்றும் முன்னேற்ற நடவடிக்கைகள் தெர்பி;ல் இந்த அவகாசம் தேவைப்படுகிறது.
இந்தநிலையில் ஐக்கிய நாடுகள் சபை இதற்காக ஆதரவை வழங்கும் என ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் யோசனை படி இலங்கை காணாமல் போனோர் தொடர்பான நிபுணர் மற்றும் ஏனைய அதிகாரிகளை நாட்டுக்குள் வர அனுமதித்தமையை ஆணையாளர் வரவேற்றுள்ளார்.
இந்தநிலையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் சிறுபான்மை விடயங்கள் தொடாபான ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் இலங்கைக்கு செல்லவுள்ளார்.
சுதந்திரம் தொடர்பான கருத்துக்கள் மற்றும் வெளிப்படுத்துகை தொடர்பான விசேட நிபுணர் 2017ஆம் ஆண்டு ஆரம்ப பகுதியில் இலங்கைக்கு செல்லவுள்ளதாகவும் ஹூசைன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அமைக்கப்பட்டிருக்கும் தேசிய அரசாங்கம் புதிய அரசியல் மீளமைப்புக்கான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் நல்லாட்சி தொடர்பான மீளமைப்பு நீதி மற்றும் பொருளாதார மீளமைப்பு விடயங்களில் முன்னோக்கி நகரவேண்டியுள்ளது.
புதிய அரசியல் அமைப்பு 2016 ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் திருத்தங்களுடன் நாடாளுமன்றில் நிறைவேற்றப்படும் என எதிர்பாக்கப்படுகிறது.
இந்த அடிப்படையில் 2017ஆம் ஆண்டு சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்படலாம்.
இலங்கையில் ஏற்படத்தப்பட்டுள்ள நம்பிக்கை மற்றும் நம்பக தன்மைக்கு ஊறுள் விளைவிக்கப்படும் வகையில் செய்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சிங்களே என்ற சுவரொட்டி பிரசாரம் சிறுபான்மைக்களுக்கு எதிரான தேசியவாத தாக்கமாக அமைந்திருக்கிறது.
இந்தநிலையில் அரசாங்கம் இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்.
சிறுபான்மை சமூகங்களில் நம்பிக்கையை வெள்ளக்கூடிய வடக்கு, கிழக்கின் காணி விடுவிப்பு துரித வேகத்தில் மேற்கொள்ளப்படவில்லை.
காணாமல் போனோர் தொடர்பாக அமைக்கப்படவுள்ள அலுவலகம் காணாமல் போனோரின் உறவினர்களின் நம்பிக்கையை பெறும் வகையில் அமைக்கப்படவேண்டும்.
இது அரசாங்கத்தின் கடமையாக அமைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அண்மையில் வெளியான கொத்தணி குண்டகள் இறுதிபோரில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படம் குற்றச்சாட்டு தொர்பில் சுயாதீன பக்கசார்பற்ற விசாரணை மேற்கொள்ளப்படவேண்டம்.
அரசாங்கத்தை பொறுத்தவரையில் பாதுகாப்பு பிரிவின் மீளமைப்பை எவ்வாறு ஆரம்பி;ப்பது என்ற சவால் முன்னிற்கிறது.
இதன்போது, படைகளுக்குள் உள்ளீர்க்கப்படுபவர்கள் சிறந்த நிர்வாக தெரிவின் அடிப்படையில் உள்வாங்கபட வேண்டும்.
இது சர்வதேசத்தில் இலங்கையின் படையினருக்கு சிறந்த இடத்தை பெற்று கொடுக்கும்.
இந்தநிலையில் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து எதிர்வரும் அமர்வுகளில் அறிவிக்கவுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment