- ஒருவர் இரண்டு தடவைக்கு மேல் தடவை ஜனாதிபதியாக ஆக முடியாது. அதாவது மகிந்தவால் மீண்டும் ஜனாதிபதியாக முடியாது.
- இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடமுடியாது. அதாவது கோத்தபாய, பசில் ஆகிய மகிந்தவின் இரு சகோதர்களும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது.
- மகிந்தவின் மகனை ஜனாதிபதித் தேர்தலில் நிற்கவைக்கவும் முடியாது. ஏனென்றால் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் 35 வயதைத் தாண்டியிருக்கவேண்டும் என்பது அரசியலமைப்பு விதி. 2015 வரை வயதெல்லை 30ஆக இருந்தது. 1986இல் பிறந்த நாமல் ராஜபக்ச 35 வயதைக் கடக்க 2021 ஆக வேண்டும். 2019 ஜனாதிபதித் தேர்தலில் நாமல் பங்குபெறமுடியாது. அதாவது 2024 ஆம் ஆண்டு இறுதியில் நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் தான் பங்குபெறலாம். அல்லது 2021குப் பின்னர் ஜனாதிபதி பதவி வெற்றிடம் ஏற்படவேண்டும் வேண்டும். இந்த இடைக்காலத்துக்குள் “ராஜபக்சவாத”த்துக்கான மக்கள் மவுசுக்கு என்ன நிகழும் என்றும் தெரியாது.
“நான் ஆரம்பத்திலிருந்தே கூறுகிறேன். கோத்தபாய என்பவர் மக்கள் மத்தியில் இருந்து உருவான ஒரு தலைவர் இல்லை. மக்களோடு இருந்தவரும் இல்லை. மக்களின் உணர்வுகளை அந்தளவு புரிந்தவரும் இல்லை. ஒருவகை இராணுவத்தனம் தான் அவரிடம் இருக்கிறது. அவர் பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்தில் அவர் எப்படி இராணுவத்தனத்துடன் இயங்கினார் என்பதை கண்டிருக்கிறேன். பரந்துபட்ட மக்கள் அபிலாஷையின் பாத்திரமாக அவரால் ஆக முடியாது….” என்கிறார்.
“கோத்தபாயவுடன் நேரடியாகவே இது பற்றி தெரிவித்திருக்கிறேன், அப்போது அவர்; முன்னர் நீண்ட காலமாக இராணுவச் சேவையில் இருந்த காலத்தில் உருவான உணர்வுநிலையும், அரச அதிகாரியாக இயங்கிய விதத்திலும் பார்க்க தற்போது மாற வேண்டியதன் அவசியத்தை ஏற்றுக்கொண்டார். புதிய பாத்திரத்துக்கு ஏற்றார்போல அவர் மாறுவதாக ஒப்புக்கொண்டார்.”
“ஆம். என் மச்சான் விக்கினேஸ்வரனின் பெயரும் பேசப்படுகிறது. ஆனால் நாங்கள் அவர்களுக்கு எதிரானவர்கள் அல்லவா. மச்சான் உறவு வேறு பக்கம் இருக்கட்டும். ஆனால் நாங்கள் இரு எதிர் பக்கங்களில் இருக்கிறோம்.” என்றார்.
“கோத்தபாயாவைப் போலவே ஜனாதிபதி வேட்பாளராக வாய்ப்புள்ள சமல் ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன ஆகியோருடனும் நாங்கள் தொடர்ந்து கலந்துரையாடலை நடத்தப் போகிறோம்” என்கிறார்.
“உங்கள் ஆட்சிகாலத்தில் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்ட இன்னும் சில இனவாத அமைப்புகளுக்கு ஆதரவளித்து வளர்த்து வந்ததாக குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றவே?”
“இப்படியான நிகழ்ச்சியில் இந்தளவு கீழ்த்தரமான நபர்களின் மோட்டுத்தனமான குற்றச்சாட்டுக்களில் கவனத்தை செலுத்தாமல் பிரயோசனமாவற்றில் செலவழியுங்கள்”
“புலிப் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாது என்று உலகமே கூறியபோது எங்கள் திறமையாலும், திட்டமிடலாலும் குறுகியகாலத்தில் முழுமையாக அழித்தொழித்தோம்.” என்கிறார்.
புலனாய்வுப் பிரிவை பலப்படுத்தவேண்டும் என்கிற பேரில் இந்த குற்றவாளிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்பதா கோத்தபாயவின் கோரிக்கை. மேற்படி சம்பவங்கள் சிலவற்றில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் கோத்தபாயவும் ஒருவர் என்பது இங்கு குறிப்பிட வேண்டும்.