அதேவேளை இந்த சம்பவங்களையும் கடந்தகால சம்பவங்களையும் விசாரணை செய்து அவற்றிற்கு காரணமானவர்களை  நீதியின் முன்னிலையில் நிறுத்துமாறும் ஐ.நா. ஆலோசகர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அரசாங்கம் குரோதமும் பாராபட்சமும் பரவுவதை அனுமதிக்கப்போவதில்லை என்பதை தனது நடவடிக்கையின் மூலம் வெளிப்படுத்தவேண்டும், என தெரிவித்துள்ள ஐ.நா.வின் ஆலோசகர்கள் இலங்கை ஒரு பன்முகத்தன்மை காணப்படும்  நாடு இலங்கையராகயிருப்பது என்பது பௌத்தர்களாகயிருப்பது இந்துக்களாக கிறிஸ்தவர்களாக முஸ்லீம்களாகயிருப்பதாகும் என்பதாகும் என குறிப்பிட்டுள்ளார்.