குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி நாட்டில் தங்கியிருந்த நைஜீரிய நாட்டுப் பிரஜைகள் மூன்று பேர் தெஹிவளை மேம்பலத்திற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்கிஸ்ஸ வலய குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.
தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.