சமூக வலைத்தளங்களை மிகவும் அவசியமானவையாகவே கருதுகிறேன். காலையில் முகப்புத்தகம் பார்க்கவில்லை என்றவுடன் தனிமையாக இருப்பதாக உணர்ந்தேன். காலை உணவு உண்ணாத அதிருப்தி எனக்கு இருந்தது என்று அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
மேலும், சமூக ஊடகங்களை முடக்குவ தில் எனக்கும் உடன்பாடு இல்லை. இன்று காலை எழுந்தவுடன் எனது முகப்புத்தகத்தை பார்த்தேன் எல்லாமே வெறுமையாக இருந்தது, அவ்வாறு இருக்கையில் எனக்கும் தனிமையான உணர்வே வருகின்றது.
காலையில் உணவு உண்ணாத ஒருவித உணர்வு மனதில் ஏற்படுகின்றது. உண்மையில் எம் அனைவருக்கும் அவ்வாறு இருக்கும் என்றே நினைக்கிறேன். கடந்த ஆண்டு ஒக்டோபர் அரசியல் சூழ்ச்சியின்போது சமூக ஊடகங்களே எமக்கு பெரிதும் கைகொடுத்தன. அவற்றை மறந்துவிடக்கூடாது.
ஆகவே இப்போதும் அது குறித்து கவனம் செலுத்த வேண்டும். சமூக தளங்களை தடுக்கக் கூடாது என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும். உண்மையிலேயே ஒவ்வொரு நாள் காலையும் முகப்புத்தகத்தை பார்த்தவுடன் தான் எனக்கு உற்சாகம் வரும். என்னை விமர்சித்து வரும் செய்திகளைக் கூட நான் பார்ப்பேன். அவற்றிலும் ஒருவித மகிழ்ச்சி தான் என நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.