மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் இருந்து காத்தான்குடி பிரதேசத்திற்கு சட்டவிரோதமாக லொறி ஒன்றில் 14 மாடுகளை ஏற்றி சென்ற லொறி சாரதி உட்பட இருவரை காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான நேற்று காத்தான்குடி கடற்கரை வீதியில் பொலிசாரும் இராணுவத்தினரும் இணைந்து சோதனை நடவடிக்கை மேற்கொண்டபோது குறித்த லொறிலை சுற்றிவளைத்து சோதனை மேற்கொணடனர்.
இதன் போது சட்டவிரோதமாக ஏறாவூர் பிரதேசத்தில் இருந்து காத்தான்குடி பிரதேசத்துக்கு 14 மாடுகளை லொறியில் எடுத்து வந்துள்ளதை கண்டறிந்ததையடுத்து குறித்த லொறி சாரதி உட்பட இருவரை கைது செய்ததுடன் மாடுகளையும் மீட்டனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதூக அவர் தெரிவித்தார்.