இன முறுகலை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கு எதிராக கடூழியச் சிறைத்தண்டனை வழங்கப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சட்டத்தை பயன்படுத்தி அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளது.
இந்நிலையில், சமூக வலைத்தளங்களின் ஊடாக தவறான மற்றும் இனங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிடுபவர்கள் குறித்து கண்டறிய பொலிஸ் தலைமையகத்தினால் விசேட பொலிஸ் பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அதன்மூலம் குற்றவாளியாக இனங்காணப்படுபவர்களுக்கு எதிராக 3 முதல் 7 வருடங்கள் வரை கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்குள் பிரவேசிப்பதற்காக விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்ந்தும் நீடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.