நாட்டின் தேசிய பாதுகாப்பே முக்கியம் யாழில் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர

319 0

igp-sri-lankaநாட்டில் இலஞ்ச, ஊழர் மற்றும் சமூக விரோத குற்றங்களை அடியோடு இல்லாதொழித்து தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்திக் கொள்வதே எமது நோக்கம் என்று பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்து என்பது பொது மக்களுடைய ஒத்துழைப்புடனே முன்னெடுக்கப்பட வேண்டும். இல்லையேல் அது சாத்தியமற்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் திணைக்களத்தில் 150 ஆவது ஆண்டு நிறைவு விழா யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இவ் விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:-
பொலிஸ் திணைக்களமானது மீண்டும் கட்டியமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கட்டப்பட்டுள்ள பொலிஸ் நிலையங்களின் ஊடாக பொது மக்களுக்கு தரமான சேவையை வழங்குவN எங்களுடைய நோக்கமாக உள்ளது.
பொலிஸ் திணைக்களம் என்பது பொதுமக்களுடையது. எனவே பொது மக்களுக்கு வேண்டிய பாதுகாப்பினை வழங்க வேண்டியது எங்களுடைய கடமையாகும்,
மேலும் புதிய பொலிஸ் நிலையங்களின் திதறந்து வைக்கப்படுவதன் நோக்கம் பிரதேசத்தில் கட்டம் ஒழுங்குகளையும், நிலைநாட்டுவதற்கேயாகும். துற்போது பொலிஸ் நிலையங்களில் தமிழ் பொலிஸ் அதிகாரிகளை உள்ளீர்ப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.
இவ்வாறு தமிழ் பொலிஸார் உள்வாங்கப்பட்டதன் ஊடாக தாய் மொழியில் முறைப்பாடுகளை பதிவு செய்வதற்காக நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்துள்ளோம்.
இந்நிலையில் நாட்டில் காணப்படுகின்ற சமூக விரேத குற்றச் செயல்கள், இலஞ்ச ஊழல் போன்ற குற்றங்களை பொது மக்களது ஒத்துழைப்பு இல்லது செய்ய வேண்டும். இதன் ஊடாக நாட்டின் தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்திக் கொள்வதே எமது நோக்கமாகும்.
அந்த வகையில் அதற்காக இலங்கையில் உள்ள 454 பொலிஸ் நிலையங்களது பிரதேசங்களிலும் பொலிஸ் நடமாடும் சேவைகளை நடாத்துவதற்கும் இவற்றை ஆறு கட்டங்களாக நடாத்தி வமாவட்டங்களையும், மாகாணங்களையும் ஒன்றிணைக்கவுள்ளோம் என்றார்.