ஊடக சுதந்திரத்தை உறுதி செய்யக் கோரி யாழில் 19 ஆம் திகதி போராட்டம்

310 0

k800_jpc-nimalarajan-banner-tamவடக்கு, கிழக்கில் உள்ள அணைத்து ஊடக அமைப்புக்களும் ஒன்றிணைந்து ஊடக சுதந்திரம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மொபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபடவுள்ளனர்.
ஊடகவியலாளர் நிமலராஜனின் 16 ஆவது ஆண்டு நினைவு நாளில் நடாத்தப்படவுள்ள இவ் கண்டன ஆர்ப்பாட்டத்தினை யாழ்.ஊடக அமையம் ஏற்பாடு செய்துள்ளது.
படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் போயுள்ள ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்கள்கள் தொடர்பில் உண்மை நிலையினை வெளிக் கொண்டுவரும் வகையில் சர்வதேச ஊடக அமைப்புக்கள் முன்னிலையில் காலதாமதம் இன்றி விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டும்.
சகல ஊடகவியலாளர்களும் தமது பணிகளை சுதந்திரமாக அற்றுவதற்கான சுதந்திரத்தினை அனைத்து மட்டங்களும் உறுசெய்ய வேண்டும்.
நிறைவேற்றப்பட்டுள்ள தகவல் அறியும் உரிமை சட்டத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என்ற பிரதான கோரிக்கைகளை முன்வைத்தே இப் போராட்டம் எதிர்வரும் 19 ஆம் திகதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு யாழ்.பிரதான பஸ் நிலையம் முன்பாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஊடக சுதந்திரம் எங்கள் சுதந்திரம் என்ற தொணிப் பொருளில் நடாத்தப்படவுள்ள இக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு, கிழக்கில் உள்ள ஊடக அமைப்புக்கள் மட்டுமல்லாது தென்னிலங்கையில் உள்ள ஊடக அமைப்புக்களும் தமது ஆதரவுகளை வழங்கியுள்ளது.