உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டு தாக்குதலின் பின்னர் நாடளாவிய ரீதியில் அனைத்து தேவாலயங்களிலும் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று ஆராதனைகள் இடம்பெற்றது.
இதேவேளை தற்கொலை தாக்குதலுக்கிலக்கான மூன்று தேவாலயங்களில் ஒன்றான நீர்கொழும்பு – கட்டுவப்பிட்டிய ஷாந்த செபஸ்தியர் தேவாலயத்திலும் மூன்று வாரங்களின் பின்னர் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆராதனை இடம்பெற்றது.
இந்த ஆராதனையின் போது குண்டு தாக்குதலுக்கு இலக்காகி உயிரிந்தவர்கள், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்காக விஷேட பூசையும் இடம்பெற்றது. இதன் போது குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட பலரும் தேவாலயத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்படத்தக்கதாகும்.