மீண்டும்  தாக்குதல்கள் இடம்பெறாத சிறந்த திட்டங்களை வகுக்க வேண்டும்-வெல்கம

310 0

அடிப்படைவாதிகளினால் நடத்தப்பட்ட குண்டு தாக்குதலை  ஆளும் தரப்பினரும், எதிர் தரப்பினரும்  தமது அரசியல் பிரச்சாரமாக  பயன்படுத்திக் கொள்ள கூடாது. இவ்வாறான  தாக்குதல்கள் மீண்டும்  நாட்டில் எவரது ஆட்சியிலும் இடம்பெறாத வகையில் தற்போது சிறந்த திட்டங்களை வகுக்க வேண்டும். அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்வதாக பேச்சளவில் மாத்திரமே குறிப்பிட்டுக் கொள்கின்றது எனபாராளுமன்ற உறுப்பினர் குமாரவெல்கம தெரிவித்தார்.

அடிப்படைவாதிகளின் அமைப்பு கடந்த அரசாங்கத்தில்  வளர்ச்சி பெற்றது  என்று ஆளும் தரப்பினரும்,  2015 அம் ஆண்டுக்கு பிறகே வலுப்பெற்றது என்று  எதிர்க்கட்சியினரும்  ஒருவருக்கொருவர் குற்றஞ்சாட்டிக் கொள்கின்றார்கள்.   மிலேட்சத்தனமாக தாக்குதல் இன்று அரசியல் கட்சிகளின் பிரதான பேசுபொருளாகி   அரசியல் பிரச்சாரமாகி விட்டது.

மேற்குலக  நாடுகளிலும் இவ்வாறான  குண்டுதாக்குதல்கள் இடம் பெறும்போத அங்கு அரசியல் கட்சிகள்  அரசியல் இலாபம் தேடாமல் நாடு எதிர்க்கொண்டுள்ள சவாலினை  அனைவரும் ஒன்றிணைந்தே வெற்றிக்கொண்டு தீவிரவாதத்தை   தோற்கடித்துள்ளார்கள்.  எமது   நிலைமை  இதற்கு முற்றிலும் மாறுப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.