குண்டு வெடிப்புடன் தொடர்புடைய இருவர் வெளிநாட்டிற்கு தப்பியோட்டம் – நளின் பண்டார

302 0

நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுத்தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளில் இருவர் நாட்டை விட்டு தப்பித்து ஓடியுள்ளனர் என தெரிவித்த பிரதி அமைச்சர் நளின் பண்டார, அதன் காரணமாகவே அவர்களை இன்னும் கைது செய்யமுடியவில்லை எனவும் விரைவில் அவர்கள் கைதுசெய்யப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் சூழ்நிலையின் காரணமாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்கட்சி தலைவர் என்ற வேறுப்பாடு இல்லாமல் மக்கள் அனைவரையும் திட்டும் நிலை உருவாகியுள்ளது. இந்த குண்டுத்தாக்குதல் சம்பவங்களினால் தமக்கு பாதிப்பு எதுவும் ஏற்பட போவதில்லை என்று எதிர் தரப்பினர் எண்ணிவிட்டனர். ஆனால் இதிலிருந்து எவராலும் தப்பித்துக்கொள்ள முடியாதுடன் அனைவரும் பொறுப்புக்கூறியே ஆக வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.