நிலவிவரும் வெப்பமான வானிலையின் காரணமாக காசல்ரீ மற்றும் மாவுஸ்ஸாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மேலும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர் மின்னுற்பத்தி செய்யப்படும் பிரதான நீர்த்தேக்கங்களாக இவை காணப்படுகின்றமையால், இவற்றின் நீர்மட்டம் குறைவடைந்து சென்றுள்ளமையானது, மின்னுற்பத்தியில் எதிர்வரும் நாள்களில் பாரிய சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.