சுதந்திர தின நிகழ்வில் இலங்கை தேசிய கீதத்தை தமிழில் பாட அரசாங்கம் எடுத்த முடிவு சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுக்கும் திகதியை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
களனி பிரதேசத்தை 5 பேர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.நவம்பர் மாதம் 18ம் திகதி மனுவை விசாரணைக்கு எடுப்பது என உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், கடந்த பெப்ரவரி மாதம் 4ம் திகதி நடைபெற்ற இலங்கையின் சுதந்திர தின நிகழ்வின் இறுதியில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டது.
67 வருடங்களின் இலங்கையின் வரலாற்றில் முதல் முறையாக தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டது.இதற்கு மகிந்த ராஜபக்ச தலைமையிலான எதிரணியினரும், சிங்கள இனவாத அமைப்புகளும் கடும் எதிர்ப்புகளை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.