முரண்பாட்டை சமாதானப்படுத்திய ரஞ்சன் ராமநாயக்க

332 0

ranjan-ramanayakeஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டதாகவும் இருவரையும் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க சமாதானப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு, குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்புப் பிரிவு ஆகியனவற்றில் விசாரணைக்கு உட்படுத்துவது குறித்து ஜனாதிபதி அதிருப்தி வெளியிட்டிருந்ததனைத் தொடர்ந்து ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை உருவானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பில் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இரு தரப்பிற்கும் விளக்கம் அளித்து முரண்பாட்டை களைந்துள்ளார். இதேவேளை, லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணைக் குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஸி டயஸ் விக்ரமசிங்க பதவி விலகவிருந்த தீர்மானத்தையும், ரஞ்சன் ராமநாயக்க தலையிடு செய்து நிறுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.