வெனிசூலா நாட்டில் கைதான நாடாளுமன்ற துணை சபாநாயகர் சிறையில் அடைப்பு

316 0

வெனிசூலா நாட்டில் நாடாளுமன்ற துணை சபாநாயகராக இருந்து வந்த எட்கர் ஜாம்ப்ரனோ சிறையில் அடைக்கப்பட்டார்.வெனிசூலா நாட்டில் அரசியல் குழப்பம் உள்ளது. அங்கு நாடாளுமன்ற துணை சபாநாயகராக இருந்து வந்த எட்கர் ஜாம்ப்ரனோ கைது செய்யப்பட்டார். அவரை உடனே விடுவிக்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ, வெனிசூலா அரசை வலியுறுத்தி உள்ளார்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட எட்கர் ஜாம்ப்ரனோ, கராக்கஸ் நகரில் உள்ள கோர்ட்டில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை சிறையில் அடைக்கும்படி கோர்ட்டு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதையொட்டி, கோர்ட்டு தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “எட்கர் ஜாம்ப்ரனோ பயங்கரவாத குற்றச்சாட்டின்பேரில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.

வெனிசூலாவில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் பிற நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து எட்கர் ஜாம்ப்ரனோ செயல்பட்டார் என்பதுதான் குற்றச்சாட்டு. இது தொடர்பாகத்தான் விசாரணை நடத்தப்படுகிறது.