11.5.2019 சனிக்கிழமை யேர்மனி எசன் நகரத்தில் யேர்மனி தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவுப் பேரிணைவு மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இம்மாநாட்டில் யேர்மனி தமிழர் ஒருங்கிணைப்புக் குழுச் செயற்பாட்டாளர்களும், யேர்மனியில் செயற்படும் பிற அமைப்புக்களைச் சார்ந்தவர்களும், ஊடகவியளாளர்களும் பங்குபற்றியிருந்தனர்.
தமிழீழத் தேசியக் கொடி ஏற்றிவைக்கப்பட்டு மாவீரர்களுக்கு சுடர்வணக்கம், மலர்வணக்கம், செலுத்தப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.
இம் மாநாட்டின் நோக்கம்.
தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலைக்கான போராட்டத் தொடர்சியை சமகால அரசியற் பொறிமுறைகளினூடே முன் செலுத்தி தமிழீழம் எனும் தனியரசை அடைவதற்கான அனைத்து மக்கள் சத்திகளையும் கூட்டினைத்து செயலாற்றி இலக்கினை அடைதல்.
இம் மாநாட்டின் குறிக்கோள்களாக
தமிழீழ இலட்சிய தாகம் கொண்டு செயலாற்றும் அனைத்து தமிழ் அமைப்புக்களையும் எமது உரிமைப்போரை ஏற்று நிற்கும் பிறமொழி அமைப்புக்களையும் கூட்டினைத்தல்.
பூகோள அரசியல் நகர்வுகளுக்கு ஏற்ப சமகால இலகுவழிப் பொறிமுறைகளை எமது அடிப்படை இலட்சிய மையம் கரையாமல் கைக்கொண்டு செயலாற்றுதல்.
உலக உள்ளுர் அரசியல் அரங்குகளில் எமது தாயகக் கோட்பாடுகளை தொடர்ச்சியாக முன் கொண்டு செல்லுதலும் அதன் வழியே எமது இறையாண்மையை நிலைநாட்டுதல்.
உலகப் பரப்பெங்கும் பரந்து வாழும் எம் தமிழ் உறவுகளின் விடுதலை உணர்வலைகளை உறக்கம் கொள்ளவிடாது நம்பிக்கைகளில் இருந்து தளர்வு நிலைகாணாது விழிப்பு நிலையில் வைத்திருத்தலும் அதன் வழியே உலகம் ஏற்கும் ஒரு பொற்காலத்தைப் படைத்தலும்.
என்னும் கருப்பொருளில் கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
இதனுடாக எட்டப்படும் விளைவுகள் எத்தகையவை.
ஒருங்கிணைந்து ஒற்றுமையாதல்.
சுயமதிப்பீடு.
வரலாற்றை மீளாய்வு செய்தல்.
செயற்கூறுகளைப் பகிர்ந்தளித்தல்.
விடுதலைத் தீயை மூட்டுதல்.
தொடர் கருத்துப் பகிர்வுகள்.
புதிய அரசியற் பொறிமுறைகளை தோற்றுவித்தல்.
அழிவற்ற தலைவரின் தத்துவத்தினை தலமையேற்றல்.
தாயக மக்கள் நலன் காப்பு உணர்வை தக்க வைத்தல்.
ஆகியவை ஆராயப்பட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இறுதியாக தேசியக் கொடி இறக்கிவைக்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்னும் எழுச்சிப் பாடலுடன் மண்டப நிகழ்வுகள் நிறைவடைந்தன. அதன்பின்னர் எசன் நகரில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபிக்குச் சென்று அங்கு சுடர்வணக்கம், மலர்வணக்கம் செய்யப்பட்டு உறுதி மொழியும் எடுக்கப்பட்டு நிகழ்வு நிறைவடைந்தது.