அரசாங்கத்தில் மக்களுக்கு நம்பிக்கை இல்லையாம் மஹிந்த சொல்கிறார்!

448 0

அரசாங்கம் பலவீனமான நிலையில் இருப்பதால் மக்களும் தமது பாதுகாப்பு தொடர்பில் அச்சமான ஒரு சூழலிலேயே வாழ்ந்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த மஹிந்த ராஜபக்ஷ ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே இவ்வாறு கூறினார்.

சில விடயங்களை நாம் தவிர்த்துக்கொள்ள வேண்டும். கண்டுப்பிடிக்கப்படும் ஆயுதங்களை காண்பிக்காதுவிட்டால் அது கட்டுக்கதைகளாக மாறி பாரிய ஆபத்தாகக் கூட அமையலாம்.

சிறிய கத்தியொன்று கண்டுப்பிடிக்கப்பட்டால் கூட அது துப்பாக்கியாகவோ அல்லது குண்டொன்று கண்டு பிடிக்கப்பட்டதாகவோ சித்தரிக்கப்படலாம்.

இதுதொடர்பில் அரசாங்கத்திடம் நான் கூறியுள்ளேன். எனவே பாதுகாப்புத் தரப்பினரால் கண்டுபிடிக்கப்படும் பொருட்களை காண்பிப்பதுதான் சிறப்பாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். உண்மையில் புலனாய்வுத் துறை நாட்டில் பலமாக இருந்திருந்தால் இந்த பயங்கரவாதத் தாக்குலே நாட்டில் இடம்பெற்றிருக்காது.

ஏனெனில்இ குறித்த தீவிரவாதிகளின் பெயர் விபரங்கள்இ எங்கே தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்பது தொடர்பிலெல்லாம் ஏற்கனவே தகவல்கள் வெளியாகிவிட்டன. ஆனால் இதுதொடர்பில் நடவடிக்கை எடுக்கத் தவறியமைதான் இவ்வளவு பிரச்சினைக்குக் காரணமாக இருக்கிறது.

ஏப்ரல் விடுமுறை வந்தமையால் சிலர் விடுமுறையில் இருந்துள்ளார்கள். இதனால் இதனை எவரும் பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை.

பாடசாலைகளின் பாதுகாப்பு தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாணவர்களை பலி கொடுத்து இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது.

பாதுகாப்புத் தரப்பினர் நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் இன்னும் உறுதியான கருத்தை முன்வைக்காதமையால் தேசிய பாதுகாப்பு குறித்து எதுவித கருத்தையும் இப்போதைக்கு முன்வைக்க முடியாது.

அரசாங்கம் தற்போது பலவீனமான நிலையிலேயே இருக்கிறது. இதனால் மக்களும் அச்சமான ஒரு சூழ்நிலையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்” என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.