பயங்கரவாதி சஹ்ரானுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் இந்திய ஐ.எஸ்.ஐ.எஸ். செயற்பாட்டாளர்கள் என சந்தேகிக்கப்படும் 16 பேர் இந்திய பாதுகாப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் உத்திரப் பிரதேசம், ஆந்திரா, கேரலா மற்றும் தமிழ் நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகின்றது.
பயங்கரவாதி ஸஹ்ரானின் தொலைபேசி தொடர்பாடல் குறித்து மேற்கொண்ட விசாரணைகளின் போதே இந்த தொடர்பு குறித்து தகவல்கள் பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
கடந்த 21 ஆம் திகதி தற்கொலை குண்டுத் தாக்குதல் நடாத்திய இப்றாஹீமின் மகன் ஒருவர் இந்தியாவுக்கு நான்கு தடவைகள் வந்து சென்றுள்ளதாக இந்திய தகவல்கள் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.