சீயோன் தேவாலயத்தைப் பார்வையிட்ட இந்தியப் போதகர்கள்

321 0

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தை, இந்திய போதகர்கள் குழுவினர் பார்வையிட்டுள்ளனர்.

மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தின வழிபாடுகளின் போது, சீயோன் தேவாலயத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல் காரணமாக அங்கு 29 பேர் உயிரிழந்திருந்ததுடன் 74 பேர் படுகாயமடைந்திருந்தனர்.

குறித்த தாக்குதல் காரணமாக தேவாலயம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தாக்குதல் தொடர்பில் குற்றப்புலனாய்வு துறையினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்த நிலையில் இலங்கையில் ஏனைய பகுதிகளில் தற்கொலை தாக்குதல்கள் காரணமாக பாதிக்கப்பட்ட தேவாலயங்கள் புனரமைக்கப்பட்டு வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மட்டும் வழங்கப்படாத நிலையிலேயே இருந்து வந்தது.

குறித்த தேவாலயம் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணைகளை தொடர்ந்து, நேற்று தேவாலயம் தேவாலய நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து இன்று தேவாலயத்தினை தூய்மைப்படுத்தும் பணிகளை ஆலய நிர்வாகத்தினரும் பொது மக்களும் மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்போதுஇ சீயோன் தேவாலயத்தினை பார்வையிடுவதற்காக இந்தியாவில் இருந்தும் போதகர்கள் குழுவினர் வருகை தந்து தேவாலயத்தினை பார்வையிட்டதுடன் பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டனர்.