ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாங்குளம் கிராமத்தில் நேற்று(10) மாலை 5.10 மணியளவில் வீசிய கடும் காற்று காரணமாக, 22 வீடுகள் சேதமடைந்துள்ளதாக, ஒட்டுசுட்டான் பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் இரண்டு வீடுகள் முழுமையாகவும் இருபது வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
இதேவேளை, குறித்த பகுதியில் இருக்கின்ற சந்தை பகுதியிலும் கூரையில் சில பகுதிகள் சேதம் அடைந்து இருப்பதாகவும் மேலும் சில இடங்களில் இந்த காற்றால் சேதங்கள் ஏற்பட்டு இருப்பதாகவும் அறியமுடிகின்றது.