வௌிநாட்டவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு!

391 0

உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த வௌிநாட்டவர்களின் உறவினர்களுக்கு இலங்கை அரசாங்கத்தால் இழப்பீடு வழங்கவுள்ளதாகத் தெரிவித்த இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் சுற்றுலாத்துறை மேம்பாட்டு பணியகத்தின் தலைவருமான கிஷூ கோமஸ், இதற்கமைய, தாக்குதலில் உயிரிழந்த ஒருவருக்கு 10 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவிருப்பதாகவும் கூறினார்.

இந்தத் தாக்குதலில், 44 பேர் வெளிநாட்டவர்கள் என்று அடையாளங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் 11 பேர் இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள்.

முகவர்கள் மூலம் அவர்களது விவரங்கள் பெறப்பட்டு, அவர்களது உறவினர்களிடம் இழப்பீட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.