பயங்­க­ர­வாத தாக்­குதல் கிறிஸ்­தவ தேவா­ல­யங்­களில் இடம்­பெற்ற கார­ணத்­தினால்  தேவா­ல­யங்கள் மட்­டுமே இலக்காக இருக்­காது. மடு, நல்லூர் கந்­த­சாமி கோவில், வற்­றாப்­பளை அம்மன் கோவில்  ஆகி­ய­வற்­றைக்­கூட இலக்கு வைக்­கலாம். ஆகவே மக்கள் அதி­க­மாக வாழும் இந்த பகு­தி­களில் பாது­காப்பை அர­சாங்கம் பலப்­ப­டுத்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் செல்வம் அடைக்­க­ல­நாதன் சபையில் தெரி­வித்தார். 

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை நடை­பெற்ற நாட்டின் பாது­காப்பு நில­வரம் தொடர்­பான சபை ஒத்­தி­வைப்பு வேளை விவா­தத்தின் மூன்றாம் நாள் விவா­தத்தில் உரை­யாற்­றிய போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார்.

அவர் மேலும்  உரை­யாற்­று­கையில், உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று கொல்­லப்­பட்ட எமது மக்­க­ளுக்­கான அஞ்­ச­லியை நான் இந்த சபையில் செலுத்­து­வ­துடன், இந்த மனி­தா­மி­பா­ன­மற்ற செயற்­பாட்டை செய்­த­வர்­களை வன்­மை­யாக கண்­டிக்­கின்றேன். எனது எதிர்ப்பை தெரி­வித்­துக்­கொள்ள விரும்­பு­கிறேன்.   இந்த மாதம்   தமி­ழீழ விடு­தலை இயக்­கத்தின் தலைவர் ஸ்ரீ சபா­ரத்னம் அவ­ரோடு மரித்த எமது போரா­ளி­களும் பொது­மக்­க­ளுக்கும் எனது அஞ்­ச­லியை செலுத்­திக்­கொள்­கிறேன்.  இந்த தாக்­கு­தலில்  நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை வீழ்த்­து­வது மற்றும் மக்கள் செறி­வாக வாழக்­கூ­டிய இடங்­களில் தாக்­கு­தலை நடத்­து­வது என்ற இரண்டு நோக்­கங்கள்  இருந்­துள்­ளன. இது மிகவும் மூர்க்கத் தன­மா­னதும் முஸ்லிம் சமூ­கத்தை எமது சமூ­கத்தில் இருந்து பிரித்­துப்­பார்க்­கின்ற செய­லு­மாக   இடம்­பெற்­றுள்­ளது. இதனை வன்­மை­யாக கண்­டிக்­கின்றோம்.

இந்த பயங்­க­ர­வாதம் என்­பது வேறு, விடு­த­லைப்­பு­லி­களின் பயங்­க­ர­வாதம் என்­பது வேறு என்­பதை எதிர்க்­கட்சி தலைவர் சபையில் சுட்­டிக்­காட்­டினார். எமது போராட்டம் வேறு இந்த தீவி­ர­வாதம் வேறு என்­பதை அவர் உணர்ந்­துள்ளார் என்­பது மகிழ்ச்­சி­யாகும். இவ்­வா­றான மோச­மான பயங்­க­ர­வாத செயற்­பா­டு­களை நாம் ஏற்­க­வில்லை. இந்த பயங்­க­ர­வ­தத்தை நாம் அனை­வரும் இணைந்து தடுக்க வேண்டும். எமது சமூ­கத்தை இந்த நேரத்தில் அமை­தி­யாக வைத்­துள்­ள­தற்­காக நான் எமது கிறிஸ்­தவ மத தலை­வர்­க­ளுக்கு நன்­றி­களை தெரி­விக்­கின்றேன். இந்த தாக்­குதல் கிறிஸ்­தவ தேவா­ல­யங்­களை தாக்­கி­யதால் இப்­போது பாது­காப்பு முழுக்க தேவா­ல­யங்­களை நோக்­கியே உள்­ளது. ஆனால் ஏனைய மக்கள் செறிந்து வழி­பாடும் வணக்­கஸ்­த­லங்கள் மீதும் அச்­சு­றுத்தல் உள்­ளது. இந்த தீவி­ர­வா­திகள் தமது தாக்­கு­தலை மாற்­றி­கூட செய்­யலாம். உதா­ர­ண­மாக மடு, நல்லூர் கந்­த­சாமி கோவில், வற்­றாப்­பளை அம்மன் கோவில் ஆகி­ய­வற்­றைக்­கூட இலக்கு வைக்­கலாம். ஆகவே மக்கள் அதி­க­மாக வாழும் இந்த பகு­தி­களில் பாது­காப்பை அர­சாங்கம் பலப்­ப­டுத்த வேண்டும்.

மேல்­நோக்கி பறக்கும் கம­ராக்­களின் செயற்­பா­டுகள் குறித்தும் பேசப்­ப­டு­கின்­றது. வணக்­கஸ்­த­லங்கள் மீதும் இவை பறக்கவிடப்படுகின்றன. ஆகவே இது குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். மேலும் இந்த பயங்கரவாத  செயற்பாடுகளை அரசியல் மயமாக்காது நியாயமாக இது குறித்து செயற்பட வேண்டும். அத்துடன் அரசியல் கைதிகளை விடுவிக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை விரைவுபடுத்த வேண்டும்  என்றார்.