மர்ம நோயினால் முன்னாள் போராளி திடீர் மரணம்

647 0

தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் முன்னாள் போராளி ஒருவர் பெயர் அறியப்படாத நோயினால், நேற்றைய தினம் மரணமடைந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

புனர்வாழ்வு பெற்று விடுவிக்கப்பட்ட நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி, நாலாம் கட்டையில் வசித்து வந்த, 31 வயதான குணசேகரம் வசீகரன் என்ற முன்னாள் போராளியே இவ்வாறு மரணமடைந்துள்ளார். திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, சிகிச்சை பலனின்றி இவர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இனவாத ஶ்ரீலங்கா அரசாங்கம் புணர்வாழ்வு எனும் பெயரில் முன்னாள் போராளிகளிற்கு உடல், உள ரீதியாக நெருக்கடிகளை கொடுத்ததினாலேயே என்னவென்று அறிய முடியாத நோயினால் போராளிகள் சாவடைகிறார்கள்.

நன்றி தாரகம்.