ரயில் பாதையைக் கடக்க முற்பட்ட தனியார் பேருந்தை (மினிவான்) தொடருந்து மோதியதில் சேவையில் ஈடுபடச் சென்ற தனியார் பேருந்து முற்றாக சேதமடைந்தது. சம்பவத்தில் சாரதி படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எழுதுமட்டுவாழில் இன்று காலை இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு பயணித்த அதிவேக சொகுசுத் தொடருந்துடனேயே இந்த விபத்து இடம்பெற்றது.
எழுதுமட்டுவாழ் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையை மினிவான் ஒன்று கடக்க முற்பட்ட போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
தனியார் பேருந்து சேவையை ஆரம்பிபதற்காக தரிப்பிடத்தை நோக்கி செல்லும் போதே இடம் விபத்து இடம்பெற்றதாகவும் அதில் சாரதி படுகாயமடைந்த நிலையில் யாழ்,போதனா வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.