மும்பையில் இருந்து மான்செஸ்டருக்கு சென்ற விமானத்தில் சக பெண் பயணிக்கு அத்துமீறி முத்தம் கொடுத்த இந்தியருக்கு ஓராண்டு சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையைச் சேர்ந்தவர் ஹர்தீப் சிங்(36). இவர் டூரிஸ்ட் விசா மூலம் மான்செஸ்டருக்கு சென்று, அங்கு தங்கி சுற்றி பார்க்க முடிவெடுத்துள்ளார். இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் மும்பையில் இருந்து மான்செஸ்டருக்கு விமானத்தில் புறப்பட்டார்.
இவருக்கு அருகில் 20 வயதுடைய பெண் ஒருவர், தனது தாயுடன் பயணம் செய்துள்ளார். பயணத்தின் போது ஹர்தீப், ஆரம்பத்தில் அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்துள்ளார். அந்த பெண் அங்கு உட்காரவே மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார். தொடர்ந்து ஹர்தீப் மெதுவாக பேச தொடங்கவே, வழியின்றி பதில் மட்டும் கூறி வந்துள்ளார்.
அதன் பின்னர் இயர்போன் போட்டுக் கொண்டு படம் பார்க்க தொடங்கிவிட்டார். சிறிது நேரம் அமைதியாக இருந்த ஹர்தீப், அந்த பெண்ணிடம் மீண்டும் பேச்சு கொடுத்துள்ளார். அந்த பெண்ணால் படமும் பார்க்க முடியவில்லை.
விமானத்தில் அனைவரும் தூங்க தொடங்கிவிட்டனர். நேரம் செல்ல செல்ல அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்ததை நிறுத்திவிட்டார். அந்த பெண்ணும் நிம்மதி அடைந்து தூங்க தொடங்கினார். இதனை பயன்படுத்திக் கொண்ட ஹர்தீப், அப்பெண்ணுக்கு அத்துமீறி முத்தம் கொடுத்துள்ளார்.