பள்ளி கல்வித்துறையில் 6 பாட திட்டங்களும் நீடிக்கும் – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

341 0

பள்ளி கல்வித்துறையில் தொடர்ந்து 6 பாட திட்டங்களும் நீடிக்கும். மொழி பாட திட்டங்களை பொறுத்தவரையில் இருமொழி கொள்கை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 2 மொழி பாடங்களுக்கு பதிலாக ஒரு மொழி பாடத்தை அமல்படுத்துவதற்கான பரிந்துரையை தமிழக அரசுக்கு பள்ளி கல்வித்துறை அனுப்பியிருப்பதாக தகவல் வெளியானது.

இதுதொடர்பாக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று இரவு விளக்கம் அளித்து கூறியதாவது:-

பள்ளி கல்வித்துறையை பொறுத்தவரையிலும் தொடர்ந்து 6 பாட திட்டங்களும் நீடிக்கும். மொழி பாட திட்டங்களை பொறுத்தவரையில் இருமொழி கொள்கை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும். எந்த விதமான மாற்றங்களும் பள்ளி கல்வித்துறையில் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. செயல்படுத்தப்போவதும் இல்லை.

மாணவர்களுக்கு எந்த குழப்பமும் இல்லை. தற்போது இருக்கும் பாடதிட்டங்கள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறதோ? அதேதான் தொடர்ந்து செயல்படுத்தப்படும். மொழி பாட திட்டமாக தமிழும், ஆங்கிலமும் இருக்கும். தொடர்ந்து 6 பாட திட்டங்களும் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.