ஸ்ரீலங்கா பொலிஸின் 150ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா பொலிஸின் 150ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று காலை யாழ்ப்பாணம் கோட்டை முன்பாக விருந்தினர்கள் வரவேற்புடன் ஆரம்பிக்கப்பட்டு தேசியக் கொடி ஏற்றல், தேசிய கீதம், இறை வணக்கம், பொலிஸார், பொலிஸ் பான்ட் வாத்தியக்குழு மற்றும் யாழ்ப்பாணத்தின் பிரபல பாடசாலை மாணவர்கள் உள்ளடங்கிய வீதி அணிவகுப்பு ஆகியன இடம்பெற்றன.
வீதி அணிவகுப்பினைத் தொடர்ந்து பொலிஸாரால் நடாத்தப்பட்ட பரீட்சையில் சிறப்பாக செயற்பட்ட மாணவர்கள் விருந்தினர்களால் பரிசில் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
அண்மையில் வெளிவந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேற்றில் மாகாண ரீதியாக மூன்றாவது இடத்தையும், யாழ்ப்பாண மாவடடத்தில் முதல் இடத்தையும் பெற்றுக்கொண்ட யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவி உமாசங்கர் ஜயனி விருந்தினர்களால் பரிசில் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
தொடர்ந்து வடக்கு மாகாண பொலிஸ் நிலையங்களில் சிறப்பாக செயற்பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கான பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன.
மாணவரகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கான பரிசில் வழங்கல் நிகழ்வைத் தொடர்ந்து வரவேற்பு நடனம் இடம்பெற்றது.