பாதுகாப்பு உறுதிப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவு தெரிவிக்காத நிலையில் பாடசாலைகள் திறக்கப்படுவது பொருத்தமில்லை. அதனால் அரசியல் சூதாட்டத்தை பிள்ளளைகளின் வாழ்க்கையுடன் இணைத்துக்கொள்ளவேண்டாம் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று கடந்த 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதலையடுத்து சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அத்துடன் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைமை இதற்கு முன்னர் இருந்த பயங்கரவாதத்துக்கும் பார்க்க மாறுபட்டதாகும். இந்த பேரழிவில் இருந்து மீள்வதற்கு பொது மக்களின் உதவி தேவையாகும். அதற்காக நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு அந்த நிலையில் இருந்து மீள்வதற்கு ஒத்தாசையாக இருக்கவேண்டும் எனவும் இதன்போது குறிப்பிட்டார்.