பெருந்தோட்டத்தொழிலாளர்களின் பிரச்சினை-பேச்சுவார்த்தையின் காலை அமர்வில் தீர்வில்லை(படங்கள்)

360 0

upcountyr-photos-001பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள பிரச்சினைக்கு தீர்வை எட்டும் வகையிலான தீர்மானமிக்க பேச்சுவார்த்தையொன்று இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலுள்ள தொழில் அமைச்சில் இந்த கூட்டம் இன்று முற்பகல் இடம்பெற்றது.

இதன்போது தொழிலாளர்களின் சம்பளத்திற்கு தீர்வை எட்டும் வகையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், முதலாளிமார் சம்மேளனத்துடன் கடும் வாதத்தில் ஈடுபட்டதாக அங்கிருந்து கிடைக்கும் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வருடத்திற்கு தற்போது காணப்படுகின்ற 300 வேலை நாட்களை, 250 வேலை நாட்கள் வரை குறைக்க முதலாளிமார் சம்மேளனம் எடுத்துள்ள தீர்மானத்திற்க எதிராகவே பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் வாதத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் எனவும், வேலை நாட்களில் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது எனவும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

இன்றைய தினம் காலை இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் 730 ரூபா சம்பளத்திற்கான இணக்கம் எட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை குறித்த பேச்சுவார்த்தை மாலை அமர்வாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

upcountyr-photos-003upcountyr-photos-002