சர்வதேச வெசாக் தினம் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை வியட்னாமில் கொண்டாடப்படவுள்ளது.
112 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்து 650 பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். ஜனாதிபதி மைத்திபால சிறிசேன சார்பாக அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார்.
இதேவேளைஇம்முறை அரச வெசாக் வைபவம் காலி நெல்வத்த தொட்டகமுவ ரன்பன் ரஜமகா விகாரையில் நடத்த தீர்மானித்துள்ளது.