பல்கலைக்கழகங்களை மீளவும் அடுத்த வாரம் ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நீர் வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பாராளுமன்ற அமர்வின் போது அமைச்சர் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
பாராளுமன்ற அமர்வில் விசேட வர்த்தக வரி சட்டத்தின் கீழான ஆறு கட்டளைகளும், அந்நிய செலாவணி சட்டத்தின் கீழான கட்டளையொன்றும், சுங்கக் கட்டளை சட்டத்தின் கீழான யோசனையொன்றும் நிறைவேற்றப்பட்டன.
விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம், தற்போதைய சிக்கலான சூழ்நிலையில் சகலரும் ஐக்கியமாகச் செயற்பட வேண்டும். சமயத்தை அடிப்படையாக வைத்து இத்தகைய பாரிய குற்றச்செயல்களை மேற்கொள்வது வெட்கக்கேடான விஷயம் என்றும் அமைச்சர் கூறினார்.