ஐ.எஸ் இயக்கத்துடனான தொடர்புகளை கொண்டிருந்த சந்தேகத்தின் பேரில் கைதான உதவி கல்விப் பணிப்பாளர் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர தெரிவித்தார்.
தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் ஹசிமீன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தவரும், அவருடன் நிதியை கையாண்டவரும் என சந்தேகிக்கப்படும், மொஹமட் அலியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
60 வயதான இவர் காத்தான்குடியைச் சேர்ந்தவர். காத்தான்குடி பொலிஸாரினால் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.