மின்சாரக் கொள்வனவில் இடம்பெறவுள்ள மோசடியை தடுத்து நிறுத்தவும் – மஹிந்தானந்த

340 0

தனியார் துறையில் இருந்து 400 மெகாவால்ட் மின்சாரம் பெற்றுக்கொள்வதில் இடம்பெறும் மோசடியை தடுத்த நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

அவசர மின்சார தேவைக்காக 400 மெகாவோட் மின்சாரத்தை பெற்றுக்கொள்ள கடந்த ஏப்ரல் 20 ஆம் திகதி அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. என்றாலும் குறித்த அமைச்சரவை பத்திரத்தில் ஒரு அலகு மின்சாரத்துக்காக 26 ரூபா செலவிடப்படுவதாக தெரிவித்து அமைச்சரவை ஏமாற்றப்பட்டிருக்கின்றது.

ஆனால் ஒரு அலகுக்கு 40 ரூபா செலவாகின்றது. மின்சாரத்தை பெற்றுக்கொள்ள இருக்கும் நிறுவனத்துக்கு பல சலுகைகளை வழங்கி இருக்கின்றது. எரிபொருளுக்கான வரி இல்லாமலாக்கப்பட்டிருக்கின்றது. இதனால் அரசாங்கத்துக்கு 180 பில்லியன் ரூபா நஷ்டமேற்படுகின்றது.

அரசாங்கம் பாரிய நிதி பிரச்சினைக்கு முகம்கொடுத்து வருகின்ற நிலையில் இவ்வாறான பாரிய மோசடிக்கு அமைச்சரவை அனுமதி வழங்கக்கூடாது. அதனை தடுத்து நிறுத்த அடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று விசேட வியாபார பண்ட அறவீடுகள் கட்டளைச்சட்ட ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்