ஆன்லைன் விளம்பரம் மூலம் பச்சிளங்குழந்தை விற்பனை

371 0

201610141125374610_baby-offered-for-sale-on-ebay-prompts-german-probe_secvpfஆன்லைன் விளம்பரம் மூலம் பச்சிளங் குழந்தையை விற்பனை செய்ய முயற்சி நடந்தது.

ஆன்லைன் மூலம் உடைகள், வீட்டு உபயோக பொருட்கள் போன்றவை விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் ஜெர்மனியில் சமீபத்தில் ஆன்லைனில் வெளியான ஒரு விளம்பரம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் பச்சிளம் பெண் குழந்தை விற்பனைக்கு உள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது.

அக்குழந்தையின் பெயர் மரியம். ஜெர்மனியில் வடக்கு ரினே – வெஸ்ட் பாலியா மாகாணத்தை சேர்ந்தவள். அக்குழந்தை படுக்கையில் அயர்ந்து தூங்கும் போட்டோ பிரசுரிக்கப்பட்டிருந்தது.

அதில் பிறந்து 40 நாளே ஆன அக்குழந்தை விற்பனைக்கு உள்ளது. அதன் பெயர் மரியம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விளம்பரம் ஆன்லைன் வாசகர்களிடையே பெரும் பரபரப்பை எற்படுத்தியது.

இதுகுறித்து போலீசாரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதை தொடர்ந்து பிரசுரிக்கப்பட்ட 30 நிமிடத்தில் அந்த விளம்பரம் நீக்கப்பட்டது. மேலும் இந்த விளம்பரத்தை வெளியிட்டது யார் என போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.