பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோரைப் பற்றி பேஸ்புக்கில் தவறாக விமர்சித்ததாக பள்ளி தலைமையாசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம், மீரட் அருகேயுள்ள சாரத்னா பகுதியை சேர்ந்தவர் முடாசிர் ரானா. இங்குள்ள ஒரு தனியார் பள்ளியின் தலைமையாசிரியராக இருக்கும் இவர் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத், யோகாசன குரு பாபா ராம்தேவ் ஆகியோரைப் பற்றி, அவதூறாகவும், தரக்குறைவாகவும், தவறான முறையிலும் விமர்சித்ததாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து, முடாசிர் ரானாவை நேற்று கைதுசெய்த போலீசார், ஒருமைப்பாட்டுக்கு எதிரான செயலில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.